கம்பனிக்கு ஒனரா? சின்ன வயசுல கல்யாணமா? பசங்க பட நடிகர் ஸ்ரீ ராம் எஸ்க்குளுசிவ் தகவல்

By ·

கோலி சோடா நடிகர் ஸ்ரீ ராமுக்கு திருமணம் நடந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ல் வெளியான “பசங்க” திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார். இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை தான் காட்டப்படும்.

இந்த படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீராம். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு குழந்தை நட்சத்திரக்கான தேசிய விருதுமே கிடைத்தது. இந்த படத்தை எடுத்து இவர் கற்றது தமிழ், கோலிசோடா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரால் பிரபலமான நடிகராக இடம் பிடிக்க முடியவில்லை. இருந்தும் இவர் படங்களில் முயற்சித்து வருகிறார். மேலும் இவர் சினிமாவை தாண்டி கார்பன் கேப்சர் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஸ்ரீ ராம் தன்னுடைய நீண்ட நாள் காதலி ஆன நிகில் பிரியாவை திருமணம் செய்து இருக்கிறார்.

ஸ்ரீ ராம் திருமணம்:

இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ஸ்ரீராம் அளித்த பேட்டியில், நான் ஒரு கார்பன் கேப்சர் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதன் மூலமாகத்தான் எனக்கு நிகில் பிரியா அறிமுகமானார். அப்போதுதான் எங்களுடைய காதலும் ஆரம்பமானது. சோசியல் மீடியாவில் சின்ன பையனா இருந்தவருக்கு கல்யாணமா? என்று எல்லாம் பதிவு போடுகிறார்கள். மக்கள் இன்னும் என்னை குழந்தை நட்சத்திரமாக தான் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு 29 வயதாகிவிட்டது. அதுதான் உண்மை.

ஸ்ரீ ராம் பேட்டி:

அதை சொன்னாலுமே யாரும் நம்ப மறுக்கிறார்கள். என்னுடைய பார்ட்னர் நிகில் பிரியா ரொம்பவே உறுதுணையாக இருப்பார். அதோடு எதுவாக இருந்தாலும் ரொம்பவே யோசித்து சரியாக பண்ணுவார். அவர்தான் என்னை வழி நடத்துகிறார். இந்த மாதிரியான விஷயங்கள் தான் எங்களுக்குள் ஒத்து போனது. நான் இப்போ ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தான் என்னுடைய நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எட்டு வருஷமாக இந்த கார்பன் கேப்சர் டெக்னாலஜி மூலமாக ஒரு விஷயம் பண்ணுவதற்கு முழுமையாக ஈடுபட்டுக் கொண்டு கவனித்து வருகிறேன்.

https://www.youtube.com/watch?v=wW9j14Y508w

சினிமாவில நடிக்காத காரணம்:

அதனால் தான் என்னால் சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்த முடியவில்லை. எனக்குள் இப்படியான ஒரு பக்கமும் இருக்கு. என்னுடைய மனைவி நிகில் பிரியாவிற்கு சினிமாவை விட இது தான் பிடித்திருக்கிறது. நாங்கள் வேலை சம்பந்தப்பட்ட விஷயமாக தான் அதிகமாக பேசிக்கொண்டிருப்போம். அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆர்கிடெக்சர் முடித்திருக்கிறார். இப்ப திருமணமானதுக்கு பிறகு என்னை பற்றி வருகிற விஷயங்களெல்லாம் அவர்களுக்கு ரொம்ப புதுசாக இருக்கிறது. என்னை சந்திக்கிற எல்லோருமே என்னுடைய சினிமா பக்கத்தை வைத்து பேசுவார்கள். ஆனால், என்னுடைய மனைவி அப்படி கிடையாது.

https://www.youtube.com/watch?v=KQ4ghiwJGVA

திருமணம் பற்றி சொன்னது:

காதல் இப்போ கல்யாண திருமணத்தில் முடிந்திருக்கிறது. திருமணம் பண்ண போறோமுன்னு முடிவு பண்ணதுமே எங்களுடைய வாழ்க்கை சரியாகவும் பொறுப்பாகவும் கொண்டு போகணும் என்று நாங்கள் முடிவு பண்ணோம். இனிவரும் காலத்திலும் எங்களுக்கு இருக்கிற பொறுப்புகளை நாங்கள் சரியாக கையாளுவோம். அதுதான் எங்களுடைய குறிக்கோள். நான் நடித்த படங்களில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என எல்லோரிடமும் திருமண அழைப்பிதழ் குறித்து கொடுத்திருந்தோம். எல்லோருமே சந்தோஷப்பட்டு வாழ்த்தினார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full