சீரியல் நடிகை ப்ரீத்தியை கரம்பிடிக்கும் பசங்க பட சிறுவன் - இன்ஸ்டா காதலை அறிவித்த நடிகர்.

By Arun · 28/12/2022

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான திரைபடம் தான் பசங்க. இந்த படத்தின் மூலம் தான் பாண்டியராஜ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர் இவருக்கு பல விருதுகள் சமீபத்தில் இப்படத்திக்காக கிடைத்து. இந்த நிலையில் தான் ஒரு சீரியல் நடிகையை கரம்பிடிக்க உள்ளேன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

2009ல் வெளியான "பசங்க" திரைப்படம் அப்போது பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார். பசங்க திரைபடம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் அதிகமாக குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் போன்றவை காட்டப்படும். இப்படம் அப்போது பெரும் வெற்றியடைந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பசங்க 2 எடுக்கப்பட்டது ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை படக்குழுவிற்கு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் பசங்க 1 படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் கிஷோர் மற்றும் மற்றொரு கதைக்கு முக்கிய கதாபாத்திரமான ஜீவா நித்தியானந்தம் கதோத்திரத்தில் ஸ்ரீ ராமும் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் வேறு சில படங்களிலும் இணைந்து நடித்திருக்கின்றனர். மேலும் இப்படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து சமீபத்தித்தான் இப்படத்தில் நடித்திருந்த கிஷோருக்கு தமிழ்நாடு அரசின் விருது மற்றும் தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் கிஷோர் சீரியல் நடிகை நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலியுடன் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். மேலும் `உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறேன். அடுத்த வருட நாம் இருவரும் கணவன் மனைவியாக பிறந்த நாளை கொண்டாடுவோம் "லவ் யூ அச்சோமா" என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஆபீஸ்" என்ற சீரியலின் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமாகியவர். பின்னாளில் `லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் கிஷோர் திருமணம் செய்ய விருப்பதாக கூறியுள்ள நிலையில் பசங்க படத்தில் பார்த்த அந்த பையனா இவ்வளவு பெரிய ஆளா வளந்துடா என்று ஆச்சிரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

behindtalkies AMP · Quick view
View full