சத்தமில்லாமல் நடந்து முடிந்த கானா காணும் காலங்கள் நடிகர் யுதன் பாலாஜி திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் பிரபல நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ‘கனா காணும் காலங்கள்’ மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற ரோலில் நடித்திருப்பார் பாலாஜி. இவரது உண்மையான பெயர் பாலாஜி பாலகிருஷ்ணன்.
யுதன் பாலாஜி குறித்த தகவல்:
அதன் பின்னர் இவர் நதியா நடித்த பட்டாளம் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் நகர்வலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கில் கூட ஒரு படம் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
யுதன் பாலாஜி வாழ்க்கை:
அதன் பின் 2016ஆம் ஆண்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் யுதன் பங்கேற்றார். கடைசியாக இவர் பாபி சிம்ஹாவுடன் வெள்ளை ராஜா என்ற சீரிஸில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் யுதன் அவர்கள் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து இருந்தார். அதன் பின் இவர் தன் மனைவி ப்ரீத்தி விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
யுதன் பாலாஜி திருமணம்:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் யுதன் பாலாஜிக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் சுஜிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இது இவருடைய இரண்டாவது திருமணம். தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.