நான் சாதி பெயர் கேட்டேனா? சின்ன புத்தி எனக்கு இல்லை - பட்டமன்ற பேச்சாளர் ராஜா உருக்கம்
பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கடந்த 3ஆம் தேதி அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றிருந்தார். அங்கு இவருடன் சென்ற பேச்சாளருக்கும் ராஜாவுக்கு தமிழ் உணவு தயாரித்து கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு நடந்த கலந்துரையாடலில் பேச்சாளர் ராஜா, ஜாதி குறித்து கேட்டதாகவும், அந்தப் பெண் ரொம்பவே வருத்தத்தில் இருந்ததாகவும் அவருடைய சகோதரர் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருந்தார்.
இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ராஜா மீது பல கண்டனங்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து பேசிய பட்டிமன்றம் ராஜா, நான் ஜாதி குறித்து எதுவுமே கேட்கவில்லை.
அமெரிக்காவில் அட்லாண்டா பகுதியில் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது பல தமிழ் சொந்தங்கள் அவர்களுடைய வீடுகளில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்.
சாதி சர்ச்சை:
சில நேரங்களில் அந்த சாப்பாடு நம்ம ஊரின் உணவை விட ரொம்ப சுவையாக இருக்கும். நான் அங்கு இருப்பவர்கள் எல்லாம் விசாரித்து வந்தேன். அப்போது அங்கு ஒருவரை பார்த்து, இது செட்டிநாடு உணவா? என்று கேட்டேன். ஆனால், நான் அவருடைய ஜாதி குறித்து கேட்டதாக சொல்லப்படுகிறது. நான் ஜாதி சமூகம் குறித்து யோசிக்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் கிடையாது. தமிழ் ஜாதி என்ற ஒன்றைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன்.
ராஜா வீடியோ:
வேறு ஜாதி எதுவும் இல்லை. அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது சோஷியல் மீடியாவில் பரப்புகிறார்கள். அப்படி நடந்திருந்தால் அப்போதே அந்த பெண் என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லோருமே அங்கு சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். அந்த இடத்தில் எங்களை தேடி சாப்பாடு கொடுப்பவர்களை நான் ஏன் அப்படி கேட்க போகிறேன். நான் மன வேதனையுடன் தான் இதை பேசுகிறேன்.
ராஜா விளக்கம் :
எந்த காலத்திலும் நான் அப்படி இருந்தது கிடையாது. அப்படி பேசுவதும் கிடையாது. தயவுசெய்து இந்த மாதிரி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். அந்த மாதிரி நான் நடந்து கொள்ளவில்லை. தவறான புரிதல் இருந்தால் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசுகிறார். இப்படி இவர் பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.