மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கிய பவி டீச்சர் - வைரலாகும் புகைப்படங்கள்.

By Rajkumar · 13/12/2020

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் பிரேமம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாது. அந்த அளவில் அவருடைய நடிப்பு இருந்தது. மேலும், பல பேருக்கு சாய்பல்லவி என்று சொன்னால் தெரியாது,மலர் டிச்சர் என்று சொன்னால் தான் தெரியும். அதுபோல் தற்போது பிரேமம் மலர் டீச்சரை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு 'பவி டிச்சரை' கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் ஒளிபரப்பாகும் 'ஆஹா கல்யாணம்' என்ற வெப் சீரிஸ் வேற லெவல்ல மாஸ் காட்டி வருகிறது. மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ஆகா கல்யாணம் கதை காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையாகும். அதோடு இந்த ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் (பவி டிச்சர்) நடிகை பிரிகிதா. இந்தப் பவி டீச்சர் தான் இன்றைய இளைஞர்களின் கனவை தொலைக்கும் அழகான ராட்சசி. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கலக்கிய பிரிகிதா தற்போது வெள்ளித்திரையிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

மேலும், தற்போது இவர் மாஸ்டர் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வெளியான போது கூட இவர் சிறு காட்சியில் தோன்றினாலும் அதனை இவரது ரசிகர்கள் பலரும் நோட் செய்து கொண்டாடி வந்தனர். இவரது கதாபாத்திரம் மாஸ்டர் படத்தில் மிகவும் எதிர்பார்கப்படுகிறது. சமீபத்தில் கூட இவர் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வைரலாக பரவியது.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், மாடர்ன் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.பவி டீச்சரை புடவையில் பார்த்த பலரும் இப்படி திடீரென்று மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் வியந்து போய் தான் இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full