இத்தனை கோடி சொத்துக்காக மகேஷ் பாபு சகோதரரை நான்காம் திருமணம் செய்துள்ள RJ பாலாஜி பட நடிகை. கரித்து கொட்டிய முன்னாள் கணவர்.

By Arun · 1/4/2024

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் அபர்ணாவின் அம்மாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் பிரபல நடிகருக்கு நான்காவது மனைவியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை தான் நடிகை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்திருக்கிறார். நரேஷ் அவர்கள் நடிகர் மட்டும் இல்லமால் தயாரிப்பாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே தங்களின் திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்ததாக கூறப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடிகர் நரேசுடன் தங்கி இருந்தார். அவர்கள் ஓட்டலில் தங்கியிருப்பது நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யாவுக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர் அங்கு வந்தார். அங்கு பவித்ராவையும், நரேஷையும் பார்த்து சண்டை போட்டார். மேலும், பவித்ராவை செருப்பால் அடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரம்யாவை தடுத்து நிறுத்தினர். ரம்யாவைப் பார்த்தது விசில் அடித்துவிட்டு பவித்ராவுடன் காரில் கிளம்பி சென்றார் நரேஷ். இப்படி இவர்களது விவகாரம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நரேஷ் மற்றும் பவித்ராவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் நரேஷை திருமணம் செய்த காரணம் குறித்து பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுரேந்திர பிராசத் கூறியுள்ளதாவது ' ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பவித்ரா நரேஷ் திருமணம் செய்து கொண்டார் அவர் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு நபர்.

நரேஷ் பாபு உடன் இருக்கும் 1500 கோடி சொத்துக்காக தான் அவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பவித்ரா என்று லோகேஷ் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், நடிகை பவித்ரா லோகேஷ் நடிக்க இருந்த 2 தெலுங்கு திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு பட உலகின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அம்மா வேடத்திற்கு நடிகை பவித்ரா லோஷகேசை படக்குழுவினர் தேர்வு செய்திருந்ததாகவும், தற்போது அவரை அந்த படங்களில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full