ஹிந்தியில் டப் செய்யாதீங்க, காசு மட்டும் வேணுமா? தமிழர்களை வெளுத்து வாங்கிய நடிகர் பவன் கல்யாண்

By subhashini · 15/3/2025

தமிழர்களை விமர்சித்து ஆந்திர துணை முதல்வர் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரை ‘பவர் ஸ்டார்ட்’ என்று தான் அழைக்கிறார்கள். இவர் தனது நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறார்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் பவன் கல்யாண் நடிப்பில் ப்ரோ படம் வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்திருந்த ‘வினோதய சித்தம்’ படத்தின் ரீமேக் ஆகும். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஹரி ஹர வீரமல்லு என்ற படத்தை நடித்திருக்கிறார்.

பவன் கல்யாண் குறித்த தகவல்:

இந்த படத்தை ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் ஜன சேனா கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் ஆந்திராவின் துணை முதல்வராக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தமிழர்களை விமர்சித்து பவன் கல்யாண் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி திணிப்பு சர்ச்சை:

அதாவது, கடந்த சில வாரங்களாகவே இந்தி திணிப்பு பற்றிய சர்ச்சை தான் தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சில கட்சியினர் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஜனசேனா கட்சியின் உடைய 12 வது விழா நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நம்முடைய நாட்டில் இரண்டு மொழிகள் மட்டுமல்ல தமிழ் உட்பட பல மொழிகள் இருக்கு.

பவன் கல்யாண் வீடியோ:

மொழியில் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நம்முடைய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மட்டும் இல்லாமல் மக்கள் இடையே அன்பையும் ஒற்றுமையும் வழங்க்கும். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நல்லது தான். சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை. அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள்.

தமிழ் மக்கள் பற்றி சொன்னது:

பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை. ஆனால், அவர்களுக்கு இந்தி தேவையில்லை. இது என்ன லாஜிக்? முதலில் உங்கள் படங்களை இந்தியில் டப் செய்வதை நிறுத்துங்கள். வடக்கிலிருந்து டெக்னீசியனைகளை இங்கு கொண்டு வராதீர்கள். இந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா? என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதற்கு தமிழர்கள் பலருமே கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full