உங்களின் இந்த பாடலை நான் கணக்கே இல்லாமல் பார்த்திருக்கிறேன் - சிவகார்த்திகேயனுக்கு பவன் கல்யாண் போட்ட ட்வீட்.

By Rajkumar · 3/9/2020

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார். இப்படி ஒரு நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/PawanKalyan/status/1301534899694788610

தெலுங்கில் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார் நேற்று இவர் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் இதனால் திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் என்று பலரும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அந்தவகையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சிவகார்த்திகேயனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த பவன் கல்யாண், திரு சிவகார்த்திகேயன் அவர்களே உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களின் வெற்றிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும், உங்களின் ஊதா கலரு ரிப்பன் பாடல் மிகவும் பிடிக்கும். அந்த பாடலை நான் கணக்கே இல்லாமல் பார்த்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பவன் கல்யாண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு ட்வீட்டை செய்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

https://twitter.com/ChhBong/status/1301535361689030657

பவன் கல்யாணின்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு கோர சம்பவம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கடிரியோபனபள்ளியில் பவன் கல்யான் ரசிகர்கள் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனது பிறந்தநாளின் போது ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் மிகவும் மனம் நொந்து போன பவன் கல்யாண், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் உதவித் தொகை அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full