விடுதலை 2 பற்றிய சர்ச்சை கருத்து - அர்ஜுன் சம்பத்திற்கு பி.சி.ஸ்ரீராம் கொடுத்த பதிலடி

By ·

விடுதலை 2 படம் தொடர்பாக அர்ஜுன் சம்பத் பதிவிற்கு பி சி ஸ்ரீராம் பதிலடி கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'விடுதலை'. விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியானது.

மேலும், இப்படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன், கென் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுத்த வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார்.

விடுதலை 2 படம்:

இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். பிரபலங்கள் பலருமே விடுதலை 2 படத்தை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விடுதலை 2 படம் குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும்.

அர்ஜுன் சம்பத் பதிவு:

முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குனர் திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி, தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்.

படம் குறித்த விமர்சனம்:

பெருமாளின் பயங்கரவாதத்தினால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம். பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை திமுக ஊக்குவிப்பது அம்பலமாகிறது. நக்சல்வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும். சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் அயோக்கியர்களே, திரையரங்கில் கைதட்டி விசிலடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும் நக்சல் வாதத்தினால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் .

பிசி ஸ்ரீராம் பதிலடி:

இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான். அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள், வாயில் மட்டுமல்ல எல்லாவற்றின் மூலமாகவும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள் என்று கூறி இருந்தார்.
இவரின் பதிவை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அர்ஜுன் சம்பத்தின் பதிவை கண்டித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில் அவர், நம்முடைய கடந்த கால வரலாற்றையும், நிகழ்காலத்தில் நிதர்சன நிலையும் எடுத்து சொல்லும் கிளாசிக் படம் தான் விடுதலை 2. தயவு செய்து வளர்ந்து ஒரு திரைப்படத்தை கலை வடிவமாக பாருங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை