அடிக்கடி பவர் கட்,முதல்வர் ஸ்டாலினை கேள்வி கேட்ட பி.சி.ஸ்ரீராம் - பதிலளித்த அமைச்சர்.

By Rajkumar · 26/6/2023

தமிழகத்தில் அடிக்கடி பவர் கட் ஆவது குறித்து முதல்வர் மு க ஸ்டாலிடம் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இடம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பிசி ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்.

இவர் சென்னை உள்ள கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்து திரைத் துறையில் நுழைந்தார். மேலும், தேசிய விருது பெற்ற பல வெற்றிப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அதோடு இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள் தொடங்கி தற்போது உள்ள நடிகர்கள் வரை பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் கமலை வைத்து குருதிப்புனல என்ற படத்தை இயக்கி இருந்தார்.

பிசி ஸ்ரீராம் திரைப்பயணம்:

இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்த மீரா, கமலஹாசன் நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய மூன்று படங்களையும் இவர் இயக்கி இருந்தார். இந்த மூன்று படங்களும் விமர்சனரீதியாக பாராட்டுகளை பெற்று இருந்தது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதற்கு பின் இவர் படங்களை இயக்கவில்லை. சமீப காலமாகவே இவர் சோசியல் மீடியாவில் எழும் சர்ச்சைகளுக்கு கருத்து பதிவிட்டு வருகிறார்.

பிசி ஸ்ரீராம் கேட்ட கேள்வி:

இந்த நிலையில் முதலமைச்சரை பார்த்து பிசி ஸ்ரீராம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சென்னையின் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் மின்சாரம் அடிக்கடி விட்டு விட்டு வருகிறது. இதனால் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில், உங்களுடைய திறனுக்கு என்ன ஆனது? என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் கேள்வி கேட்டிருந்தார்.

மின்சாரத் துறை அமைச்சர் டீவ்ட்:

இதனை பார்த்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பதில் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன், பொதுவாகவே மாநகரின் மின்சார வழித்தடங்களில் உள்ள கட்டமைப்பை கலைய பணிகள் நடந்து வருகிறது. இனி இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம்.

பி சி ஸ்ரீராம் பதில் டீவ்ட்:

தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து பி சி ஸ்ரீராம் கூறியிருப்பது, மின்சார பிரச்சனை குறித்து இவருடைய தனிப்பட்ட அணுகுமுறை அவரது செயல் திறனை காட்டுகிறது. அவருக்கு எனது நன்றிகள் என்று பாராட்டி பதில் அளித்து இருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full