நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது போட்டியில் சென்னை ராஜஸ்தான் அணிகள் நேற்று (ஏப்ரல் 11)ஜெய்ப்பூர் மைதானத்தில் விளையாடினர். டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி . அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் ஓவரில் வாட்சன் வெளியேற, இரண்டாவது ஓவரிலேயே ரெய்னா அவுட் ஆனார். டூப்பெளஸ்ஸும் கேதர் ஜாதவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பவர் ப்ளே முடிவில் சென்னை 24/4 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய தோனி, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டார்.

Advertisement

ராயுடுவும், தோனியும் ஒரு கட்டத்தில் அவுட் ஆக அடுத்துக் களமிறங்கிய சான்ட்னர், ஃபுல் டாஸாக வந்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ – பால் என கையைத் தூக்கினார். பின்னர் ஸ்கொயர் அம்பையர் நோ பால் இல்லை எனச் சொல்ல நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது.

களத்துக்கு  வெளியே இருந்த தோனி, முதலில் நீங்கள் ஏன் நோ பால் அறிவித்தீர்கள் என மைதானத்தின் நடுவில் வந்து அம்பையர்களிடம் கோபமாகக் கேட்டார். கூல் தோனியின் ரசிகர்கள், தோனியின் கோபத்தை ஆச்சர்யத்துடனும் மிரட்சியுடனும் பார்த்தனர்.  இந்த நிலையில், ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக ஐபிஎல் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Advertisement