விருது விழாவில் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பெப்ஸி உமா, விஜயசாரதி,டாப் 10 ரத்னா - 90ஸ் ரசிகர்களை எமோஷனல் ஆக்கிய புகைப்படம்.

By Rajkumar · 4/4/2023

என்னதான் தற்போது பல விதவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் 90ஸ் காலகட்டத்தில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை நிச்சயம் 90ஸ் ரசிகர்களால் மறக்க முடியாது. விடாது கருப்பு, மாய் டியர் பூதம், சித்தி, பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல், டாப் 10 என்று பலவற்றை 90ஸ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல 90ஸ் காலகட்டத்தில் பணியாற்றிய தொகுப்பாளர்களையும் நிச்சயம் மறக்க முடியாது. அந்த வகையில் பெப்சி உமாவை மறக்க முடியுமா.

View this post on Instagram

A post shared by Rekha (@rekhaasivan66)

90 கால கட்டங்களில் போன் பிரபலம் இல்லாத காலத்தில் கூட அதிக ரசிகர்களை கொண்டவர். அதோடு அவருடைய சிரிப்பு ,அழகு, குரல் என அவரை புகழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகும், ரசிகர்களையும் கொண்டவர். மேலும், என்றும் மாடர்ன் உடைகளை போடாதவர், அதோடு அவர் அழகாக வண்ண வண்ண புடவைகளை உடுத்தி கொண்டால் பொதும் பார்ப்பதற்கு கண்களை கவர வைக்கும்.

அது தான் அவருடைய கூடுதல் சிறப்பும் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இன்று வரை அவர் இடத்தை யாராலும் பூர்த்தி செய்யவில்லை. மேலும், எந்த விஜே கூட அவருடைய இடத்தை பிடிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை 15 வருடம் அவர் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால், பெப்சி உங்கள் சாய்ஸுக்கு பின்னர் இவர் வேறு எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

இப்படி ஒரு நிலையில் பெப்சி உமாவை சந்தித்துள்ள நடிகை ரேகா நாயர் அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் குழந்தை பருவ கனவு ஒன்று நினைவானது. ஆண்களில் அஜித் அவர்களையும் பெண்களில் பெப்சி உமா அவர்களையும் சந்திக்க வேண்டும் என்பது தின கனவாகவே இருந்தது அந்தக் கனவு நேற்றைக்கு நிஜமானது
நான் இத்தனை ஆண்டு காலம் அவர்களை கொண்டிருந்த கற்பனை மொத்தத்தையும் அவர்களிடம் சொல்லி விட்டேன்.

15 நிமிட உரையாடலில் ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் நான் வசித்து வருகிறேன்
இருந்தும் ஒரு முறை கூட அவர் வெளியில் வந்து பார்த்ததே இல்லை. நேற்றைக்கு அதைச் சொன்னவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டு உண்மைதான் நான் வெளியே வருவதில்லை. வீட்டுக்கு வாருங்கள் என்று அன்போடு அழைத்த அந்த அழகிக்கு என் வாழ்த்துகள்.

உங்கள் கொஞ்சும் குரல், உங்கள் அழகிய தமிழ், உங்கள் ஆடை, நீங்கள் வைத்திருக்கும் மல்லிகை பூ என உங்களை நேசிக்க ஆயிரம் உண்டு ஆதலாலேயே உங்களை பெண் தொகுப்பாளர்களில் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் அதை எப்போதும் மகிழ்ச்சியோடு பாராட்டுவேன். வாழ்த்துகள் அக்கா என்று பதிவிட்டுள்ளார். இதே போல 90ஸ் ரசிகர்களின் பேவரைட் விஜயசாரதியும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் டாப் 10 தொகுப்பாளரும் செய்தி வாசிப்பாளருமான ரத்னா மற்றும் பெப்சி உமாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full