விஜித் பச்சனின் 'பேரன்பும் பெருங்கோபமும்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இந்த படத்தில் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சாய் வினோத், சுபத்ரா ராபர்ட், லோகு, பாவா சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை இ5 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் தலைமை செவிலியராக ஹீரோ விஜித் பச்சன் வேலை செய்து வருகிறார். அப்போது குழந்தை கடத்தல் வழக்கில் ஹீரோவை கைது செய்கிறார்கள். விசாரணையில் ஹீரோ விஜித் குற்றத்தை ஒத்துக் கொள்கிறார். அதோடு போலீசிடமும் பல அதிர்ச்சிகரமான தகவலையும் விஜித் பச்சன் சொல்கிறார். இதை அடுத்து அவரை நீதிபதி முன்பு நிற்க வைக்கிறார்கள்.
அதற்குப் பின் அவருக்கு தண்டனையும் கிடைத்து சிறையில் அடைக்கிறார்கள். அப்போதுதான் அவரைப் பற்றி போலீசார் விசாரிக்கிறார். இவர் வேண்டுமென்றே சிறைக்கு வந்த விஷயம் தெரிய வருகிறது. செய்யாத குற்றத்துக்காக விஜித் பழியேற்று கொண்டு சிறைக்கு வருகிறார். எதற்காக விஜித் சிறைக்கு வந்தார்? போலீஸிடம் விஜித் பச்சன் சொன்ன ரகசியம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. இந்த படத்தில் நாயகனாக விஜித் பச்சன் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் இவர் கல்லூரி மாணவர், இளைஞர், வயதான தோற்றம் என மூன்று கெட்டப்பில் சிறப்பாக பொருந்தி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். எந்த இடத்திலுமே முகம் சுளிக்கும் அளவிற்கு ஹீரோவின் நடிப்பு இல்லை. இவர் அடுத்து அறிமுக நடிகையாக ஷாலி நிவேகாஸ் நடித்து இருக்கிறார். குடும்பம் பாங்கான ரோலுக்கு ஏற்ப அவருடைய முக பாவனைகள் இருந்தது. வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் வழக்கமாக தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். இவர்களை அடுத்துப் படத்தில் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் இளையராஜா இசை அருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. சாதியினால் ஏற்படும் மன உணர்வுகளையும், அதன் மூலம் கிடைக்கும் வன்மத்தையும் திரையில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். ஆணவக் கொலைக்கு பழிவாங்கும் கதை. இருந்தாலும் பல திருப்பங்களோடு இயக்குனர் சொல்ல முயற்சிப்பது நன்றாக இருக்கிறது.
பல காலகட்டங்களில் நடந்த ஜாதி வன்கொடுமையை படத்தில் இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படம் பார்க்கும்போது மனதை பதற வைக்கும் அளவிற்கு இருக்கிறது. ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வு, ஜாதி வெறி ,அது வளரும் முறை, அதனால் ஏற்படும் விளைவுகள் என அனைத்துமே இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். முதல் பாதி பொறுமையாக இருந்தாலும் இரண்டாம் பாதி நன்றாக சென்றிருக்கிறது.
மொத்தத்தில் ஓருமுறை சென்று பார்க்கலாம்.
நிறை:
விஜித் பச்சான் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
கதைக்களம்
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
அழுத்தமான காட்சிகள்
குறை:
ஆங்காங்கே சில ஆட்சி குறைபாடுகள்
இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
மொத்தத்தில் பேரன்பும் பெருங்கோபமும் - முயற்சி