விசுவல் எஃபெக்ட் எடிட்டிங்கில் கிங் - மொத்த சொத்தையும் யார் பெயருக்கு எழுதி வைத்தார் பீட்டர் பால்?

By subhashini · 3/5/2023

வனிதாவின் கணவர் பீட்டர் பால் தன்னுடைய மொத்த சொத்தையும் யாருடைய பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது வனிதா படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

வனிதா-பீட்டர் பவுல் திருமணம்:

இதனிடையே பீட்டர் பவுல் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பவுல் சினிமாவில் எடிட்டிங் கலைஞராக இருந்தவர். இவர் சினிமாவில் தான் இருந்தார் என்பது அவரை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. வனிதாவை இரண்டாவது முறை திருமணம் செய்த பின்பு தான் இவரை பலருக்கும் தெரிந்தது. மேலும், இவர் youtube சேனல் ஒன்று தொடங்கி இருந்தார். அந்த சேனலுக்கு விஷுவல் எபெக்ட் எடிட்டிங் பணி செய்து இருந்தார் வனிதா.

வனிதா-பீட்டர் பவுல் உறவு:

அப்போதுதான் பீட்டர் பாலை வனிதா நாடி இருந்தார். பின் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பேசி 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். அதோடு ஏற்கனவே பீட்டர் பவுலுக்கு திருமணம் ஆகி கல்லூரி படிக்கும் மகன், பள்ளியில் படிக்கும் மகளும் இருக்கிறார்கள். அவரது முதல் மனைவி எலிசபெத். வனிதா மற்றும் பீட்டரின் திருமண செய்தியை அறிந்த பீட்டரின் மனைவி எலிசபெத் சென்னை வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பீட்டர் பவுலுக்கு இருந்த குடிப்பழக்கம் :

இவர்களுடைய திருமணம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. ஆனால், திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கும், பீட்டர் பவுலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். திருமணத்திற்கு முன்னர் பீட்டர் பவுலுக்கு அதிகப்படியான குடிப்பழக்கம் இருந்து உள்ளது. ஆனால், வனிதாவை திருமணம் செய்த பின் இனி குடிக்கவே மாட்டேன் என்று கூறி இருக்கிறார் பீட்டர் பாவுல். இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அடிக்கடி பீட்டர் பவுல் குடித்ததால் அவருடன் வனிதா சண்டையிட்டு இருக்கிறார்.

பீட்டர் பவுல் சொத்து:

ஒரு கட்டடத்தில் அவரை வனிதா பிரிந்துவிட்டதாக யூடுயூபில் கண்ணீர் மல்க கூறி இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பீட்டர் பவுல் திடீர் மரணமடைந்தார். இவரின் இறப்பிற்கு வனிதா இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும், இவர் குடித்து குடித்து கல்லிரல் செயலிழந்து விட்டதால் பீட்டர் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில் பீட்டர் பவுல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சொத்தை யாருடைய பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலருமே வனிதா உடைய பெயருக்கு தான் எழுதி வைப்பார் என்று நினைத்தார்கள். ஆனால், பீட்டர் தன்னுடைய மொத்த சொத்துக்களையும் தன்னுடைய முதல் மனைவியின் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full