சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பேட்ட' படத்தின் விமர்சனம் இதோ.!

By Rajkumar · 10/1/2019

படம்:- பேட்ட
இயக்குனர்:- கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் : –ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாஸுதீன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி
தயாரிப்பு : – சன் பிக்சர்ஸ்
இசையமைப்பளார் :- அனிருத்  
வெளியான தேதி : 10-01-2019

கதைக்களம் :

ட்ரைலரில் பார்த்தது போல ரஜினி ஒரு கல்லூரியில் வார்டனாக இருந்து வருகிறார். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். அப்போது அவரை யாரோ கொலை செய்ய முயற்சிக்க அந்த பையனை காப்பற்றுகின்றார் ரஜினி. பின்னர் எதற்காக அந்த பையனை காப்பற்றுகின்றார் என்று ஒரு பிளாஷ் பேக் வருகிறது.

அந்த பிளாஷ் பேக்கில் தான் கல்லுரியில் படிக்கும் அந்த மாணவன் சசி குமாரின் மகன் என்று தெரிகிறது. சசி குமார் வில்லனின் உறவினரை காதலித்து திருமணம் செய்துகொள்ள அவரை வில்லன் கொன்றுவிடுகிறார். அதற்கு சசிகுமாரின் நண்பரான பழி வாங்க துடிக்கும் ரஜினியின் மனைவியையும் வில்லன் கொன்றுவிடுகிறார்.

பின்னர் சசிகுமாரின் மகனையும் கொள்ள வேண்டும் என்று வில்லன் துடிக்க அவரை காப்பற்ற ரஜினி கல்லூரியில் வார்டனாக சேர்கிறார். பின்னர் அவரை வில்லனின் மகன்களான விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹாவிடும் இருந்து ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

ப்ளஸ் :
முழுக்கு முழக்க ரஜினி ரசிகர்களுக்கு தீனி போட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் அக்மார்க் ரஜினியின் ஸ்டைல் மற்றும் மாஸிற்கு குறைவே இல்லை. படத்தின் முக்கிய பலம் இசை மற்றும் போட்டோக்ராபி தான். நீண்ட இடைவேளைக்கு பின்னர் பழைய ரஜினியை பார்த்தது போல ஒரு பீல்.

நெகடிவ் :

படத்தில் குறை சொல்லும் அளவிற்கு எந்த குறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ரஜினியின் பக்க ஸ்டைலான கமர்சியல் படம்.

இறுதி அலசல் :

கார்த்திக் சுப்புராஜ் ஒரு இயக்குனராக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு தரமான ரஜினி ரசிகராக இந்த படத்தை கொடுத்துள்ளார். கடந்த சில காலமாக ரஜினியின் மாஸ் மற்றும் ஸ்டைலை மிஸ் செய்த ரசிகர்களுக்கு இது ஒரு தரமான மரண மாஸ் படம். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies - ன் மதிப்பு 8/10.

Tamil Behind Talkies AMP · Quick view
View full