கையில் சர்ச்சையான டாட்டூ..!ஸ்டுடென்ட் பாபி..!குட்டி டான் விஜய் சேதுபதி..!

By Rajkumar · 28/12/2018

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தயாரிகியுள்ள 'பேட்ட' படத்தின் ட்ரைலர் இன்று (டிசம்பர் 28) வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரைலரில் நீங்கள் கவனிக்க தவறிய விடயம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

இந்த படத்தில் ரஜினி ஒரு கல்லூரிபாதுகாவலராக நடித்துள்ளார். மேலும், கல்லுரியில் பிரச்சனை செய்யவரும் எதிரிகளை தும்சம் செய்கிறார் என்பதும் ட்ரைலரில் தெரிகிறது.

இந்நிலையில்,  கேங்ஸ்டர் கதையில் மீண்டும் ரஜினி நடிப்பதாக தெரிகிறது.இந்த படத்தில் ரஜினியின் வலது கையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.
1975ல் இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அவசர சட்டத்தின்கீழ் பலர் கைதானார்கள். எனவே ரஜினியின் கையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பதால் இந்த படம் மிசா சட்டம்  சம்மந்தபட்டவராக ரஜினி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்க படுகிறது.

மேலும், ரஜினி கிராமத்து கெட்டப்பில் இருக்கும் காட்சிகளில் சசி குமார் இருக்கிறார். ஆனால், சிம்ரனுடனான காட்சியில் சசி குமார் இல்லை. எனவே, சசி குமார் கொலை செய்யப்பட்டு அவரது மகள் மேகா ஆகாஷிற்கு அரணாக ரஜினி கல்லூரியில் வார்டனாக சேர்கிறாரா என்றும் எண்ணம் தோன்றுகிறது.

அதே போல பாபி சிமஹாவும் அதே கல்லுரியில் பிடிக்கும் மாணவராக இருக்கிறார். அவரது தந்தையாக நவாஸுதீன் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்க படுகிறது. மேலும், விஜய் சேதுபதி ஒரு நார்த் இந்தியன் ரௌடியாக கட்சி அளிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full