சர்கார் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய பேட்ட ட்ரைலர்..!

By Rajkumar · 28/12/2018

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=FCB0ZfQ9Rzs&feature=youtu.be

இந்த படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாஸுதீன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் ட்ரைலர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் டீஸர் செய்த சாதனையை முறியடிக்க தவறியுள்ளது தான் மிகவும் ஆச்சர்யமான ஒன்று. இன்று
 காலை 10.25 மணியளவில் ரஜினியின் பேட்ட பட டிரைலர் வெளியான இந்த ட்ரைலர்
40 நிமிடத்தில் 1மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1078525637126582272

ஆனால்,விஜய்யின் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்கார் படத்தின் சாதனையை முறியடிக்க தவறியுள்ளது பேட்ட படத்தின் ட்ரைலர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full