பேட்ட vs விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்.! யார் கிங் ?

By Rajkumar · 11/1/2019

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த இருந்தது. எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் இறக்கியுள்ளார். தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.

இரண்டு திரைப்படங்களையும் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் ஒரே நாளில் பார்த்து முடித்துள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இரண்டு படங்களும் இருந்ததால் நேற்று அணைத்து திரையரங்குகளையும் இரவு காட்சி வரை கூட்டம் குறையாமல் இருந்தது.

தற்போது வந்த தகவலின்படி சென்னையில் ரஜினியின் பேட்ட படம் நேற்று ஒரு நாளில் பேட்ட 1.12 கோடி ரூபாயையும் விஸ்வாசம் திரைப்படம் சுமார் 88 லட்சம் ரூபாய் வசூலையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல தமிழகத்தில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் தான் அதிக வசூலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full