கோவா பட நடிகை வாங்கிய முதல் சம்பளம் இவ்வளவு தானம்.! அவரே பதிவிட்ட தகவல்.!

By Rajkumar · 6/3/2019

விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் தொடர்ந்து நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

https://twitter.com/PiaBajpai/status/1103141169528102912

ஜீவாவுடன் கோ படத்திலும், சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

பியா நடிப்பில் அபியும் அனுவும் படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தற்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை பியா. இந்த நிலையில் பியா பாஜ்பாய், முதன் முறையாக வாங்கிய சம்பளம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என்னுடய முதல் வேலை மும்பையில் ஒரு டப்பிங் வேலை தான் அதற்காக நான் வாங்கிய சம்பளம் 300 ரூபாய் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full