தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சந்திரபாபு. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம்,தயாரிப்பாளர், இயக்குனர், சிற்பம் என அனைத்திலும் திறமை கொண்ட அற்புதமான கலைஞனாக விளங்கி இருந்தவர். அதிலும் இவருடைய குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. இவருடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தன அமராவதி என்ற படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். நகைச்சுவையில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் சந்திரபாபு அவர்கள் தன்னுடைய 47 வயதில் காலமாகி இருந்தார். இப்படி புகழ்பெற்ற சந்திரபாபுவை போலவே தற்போது சினிமா துறையில் திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஈஸ்வர். இவர் சந்திரபாபுவின் தோற்றத்தில், நடை பாவனையிலும் அப்படியே இருப்பார். பல கோவில் திருவிழாக்களில் மேடையில் நடனம் ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஈஸ்வர்.

Advertisement

ஈஸ்வர் திரைப்பயணம்:

அதற்குப்பின் இவர் சினிமாவிலும் குரூப் டான்ஸராக ஆடியிருந்தார். குக்கூ, பிச்சைக்காரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ஈஸ்வர். தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப் பயணம் குறித்து கூறி இருந்தது, 50 ரூபாய் சம்பளத்தில் நான் குரூப் டான்ஸராக சினிமாவில் என்னுடைய கேரியரில் தொடங்கியிருந்தேன்.

ஈஸ்வர் அளித்த பேட்டி:

சந்திரபாபுவாக நான் மக்கள் மத்தியில் அறிவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவர் சந்திரபாபு மாதிரி என்னை மேடையில் நடனமாட சொல்லி இருந்தார். அவர் மூலம் தான் பலரும் என்னை சந்திரபாபுவாக ஏற்றார்கள். இப்போது இருப்பதுபோல் அப்போதெல்லாம் மொபைல், வீடியோவை ரெக்கார்ட் பண்ணி பார்க்க முடியாது. குங்கும பூவே கொஞ்சும் புறாவே என்ற ஒரு பாடலில் மட்டும் தான் அவரை நான் பார்த்தேன். அப்படியே அவருடைய பாவங்கள், நளினங்கள் எல்லாம் என்னுள் வந்துவிட்டது. எது பண்ணாலும் அவரை மாறியிருக்கிறது என்று பலரும் சொல்வார்கள். அது அப்படியே எனக்குள் ஊறி போய் விட்டது.

Advertisement

பட அனுபவம் குறித்து ஈஸ்வர் சொன்னது:

மேலும், இதற்காக விஜய், அஜித், பிரபுதேவா, என பல நடிகர்கள் என்னை பாராட்டி இருந்தார்கள். குக்கூ படத்தின் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. அட்டக்கத்தி தினேஷும் என்னை பயங்கரமாக பாராட்டியிருந்தார். அதற்கு பின்பு பிச்சைக்காரன் படத்தின் மூலம் எனக்கு சினிமா உலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்தில் எனக்கு முன் பலபேரு ஆடிசனுக்கு வந்து டயலாக் பேசி இருந்தார்கள். ஆனால், நான் பேசிய டயலாக் இயக்குனருக்கு பிடித்துப்போய் என்னையே நடிக்க சொல்லி இருந்தார்.

Advertisement

ஈஸ்வர் நடிக்கும் படங்கள்:

தற்போது சந்திரபாபு உடைய வாழ்க்கை வரலாறு வைத்து ஒரு படம் எடுக்கிறார்கள். அதில் நான் தான் நடிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அரசி என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படி என்னுடைய சினிமா வாழ்க்கை நல்ல படியாக தான் சென்று கொண்டிருக்கின்றது. ஒருவேளை நான் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ரவுடியாக தான் ஆகி இருப்பேன். என்னுடைய நண்பர்கள் எல்லாம் இப்போதும் ரவுடியாக தான் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement