ஜிவி பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா? - தயாரிப்பாளர் தேனப்பனின் பேச்சு
குட் பேட் அக்லி பாடல் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தேனப்பன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது சோசியல் மீடியா முழுவதும் குட் பேட் அக்லி படத்தின் செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் நல்ல வசூல் செய்து இருந்தது.
மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாக குட் பேட் அக்லி – இளையராஜா சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்தில் தன் பாடலை பயன்படுத்தியதற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் அவர், தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
https://www.youtube.com/watch?v=wGTNxo0EpMY
இளையராஜா சர்ச்சை:
பின் இது தொடர்பாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர், படத்தில் இளையராஜா பாடல்களை விதிகளின்படி அனுமதி தான் வாங்கி இருக்கிறோம். இசையில் லேபில்களிடமிருந்து அனுமதி வாங்கி அந்த உரிமைகள் அனைத்துமே லேபில்களுக்கே சொந்தமானது என்று கூறியிருந்தார். பின் இது தொடர்பாக கங்கை அமரன், காப்பி உரிமை விவகாரத்தில் நாங்கள் சர்வதேச விதிகளை தான் பின்பற்றி இருக்கிறோம். மைக்கேல் ஜாக்சன், தானே எழுதி நடனமாடி நடித்தார். இது அவர் கொண்டு வந்த திட்டம் தான். அவை அனைத்துமே அண்ணனின் லைப்ரரியில் சேர்ந்துவிடும்.
கங்கை அமரன் பேட்டி:
7 கோடி ரூபாய் செலவழித்து ஒரு படத்திற்கு இசையமைப்பாளரை நியமிக்கிறார்கள். அவர்கள் இசைக்கும் பாடல்களுக்கு கைதட்டல் கிடைக்காமல் எங்கள் பாடல்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது. அப்படிஎன்றால் எங்கள் பங்கு கிடைக்க வேண்டாமா? அவரிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்துவதால் தான் அண்ணன் கோபப்படுகிறார். எங்களுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை. எங்களிடம் பணம் கொட்டி கிடைக்கிறது என்று கூறியிருந்தார். இதை அடுத்து இளையராஜா அவர்கள் ராயல்டி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி எல் தேனப்பன்,
கங்கை அமரன் சார் ஜி.வி பிரகாஷ் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
https://www.youtube.com/watch?v=gw8qzdUsufA
தேனப்பன் பேட்டி:
இருந்தும் இளையராஜா பாடல்கள் தான் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்று பேசியிருந்தார். ஜி.வி பிரகாசுக்கு வேலை தெரியாது என்பது போல அவர் பேசி இருந்தார். ஜி.வி பிரகாஷ் அவ்வளவு தங்கமான மனிதன். அவர் 7 கோடி வாங்குவது கங்கை அமரனுக்கு வயிற்றெரிச்சலா தெரியவில்லை. எத்தனையோ பிரச்சனைகளில் ஜி.வி பிரகாஷ் விட்டுக் கொடுத்து இருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு படம் ரிலீஸ் சமயத்தில் என்னுடைய சம்பளத்துக்காக படம் நீக்குதா என்று கேட்டு சம்பளத்தை விட்டுக்கொடுத்து படத்தை ரிலீஸ் பண்ண உதவி இருந்தார். குட் பேட் அக்லி படத்தில் ராஜா சார் பாடலை யூஸ் பண்ணினது ஜி.வி பிரகாஷினுடைய தவறு கிடையாது. அது இயக்குனர் உடைய விருப்பம். பிதாமகன் படத்தில் கூட சிம்ரன் நடனம் ஆடுன பாடலுக்கு எம்.எஸ்.வி. சார் பாடலை தான் பயன்படுத்திருப்பார்கள். அதுக்காக அவருக்கு வேலை தெரியாது என்று சொல்ல முடியுமா? என கூறியிருக்கிறார்.