மதுரையில் இன்று நடைபெறவிருந்த முதல் பொதுக்கூட்டத்தை ரத்து செய்த அண்ணாமலை - டெல்லி செல்ல திட்டமா?

By S.Dhilip Kumar · 7/8/2023

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இன்று நடைபயணத்தின் முதல் பொது கூட்டம் ரத்தானதால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று திருப்பரங்குன்றம் திருமங்கலம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பின் இன்று மாலை பழங்காநத்தம் பகுதியில் இன்று நடக்கவிருந்த பொதுக்கூட்டமும் ரத்தாகியுள்ளது. ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் நேற்று பத்தாவது நாளாக மதுரையில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி .வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாத.யாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

பொதுக்கூட்டத்தை ரத்து செய்த அண்ணாமலை

இன்று திருப்பரங்குன்றம் திருமங்கலம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பின் இன்று மாலை பழங்காநத்தம் பகுதியில் இன்று நடக்கவிருந்த பொதுக்கூட்டமும் ரத்தாகியுள்ளது. இந்நிலையில் மாநில தலைவர் அண்ணாமலையில் நடைபயணத்தின் திட்டத்தில் தீடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை தீடிரென சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்ல போகிறார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன் அதிமுக – பாஜக தலைவர்களுக்கு இடையில் வார்த்தை போர் நடை பெற்று வருகிறது அது தான் இதற்க்கு காரணம் எனவும் பேசப்பட்டு வருகிறது. இன்று மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா மதுரை பொது கூட்டத்திற்கு கலந்துள்ளகொள்ள இருந்ததாகவும் இருந்துதது. தென் மாவட்டங்களை மையமாக வைத்து நடத்த உள்ள முதல் பொது கூட்டமே ரத்து செய்யப்பட்டது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது      

Tamil Behind Talkies AMP · Quick view
View full