அதை புரிந்து கொள்ளாமல் இயக்குனர் மோகன் ஜியை கைது செய்தது அநீதி- பாமக ராமதாஸ் கண்டனம்

By subhashini · 24/9/2024

இயக்குனர் மோகன் ஜி கைதாக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே திருப்பதியில் லட்டு குறித்த செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக எழுந்த சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மோகன் ஜி, இந்த பிரச்சனையில் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது திருப்பதி தேவஸ்தானம் தான்.

இப்ப கொழுப்பு மாதிரி, யாராவது விஷம் கலந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். இது குறித்து பெரிய பிரபலங்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. மேலும், இந்த மாதிரி பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். நம்ம ரொம்ப புனிதமாக நினைக்கிற ஒரு கோவிலில் பஞ்சாமிர்தத்திலும், ஆண்மை குறைவு ஏற்படுத்துற மாத்திரைகளை கலப்பதாக செவி வழியாக கேள்விப்பட்டேன். பிறகு அந்த செய்தி வெளியே வராமல் தடுத்து, எல்லாத்தையும் தடயம் இல்லாமல் அழித்துவிட்டார்கள். இதுகுறித்து பல பேர் விளக்கம் அளித்து இருந்தாலும், எனக்கு வந்த தகவலின்படி பஞ்சாமிர்தத்தில் கருத்ததடை மாத்திரைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மோகன் ஜி பேட்டி:

இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இது போல் செய்திருப்பதாக சொன்னார்கள். இது போல் விஷயங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடக்கலாம். இதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கு. இந்த நேரத்தில் இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதம் என்பது ஒரு புனிதமான விஷயம். இப்ப நடந்த விஷயம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு பெருமையாக போயிட்டு வந்து வீடியோ போட்ட பிரபலங்கள் இது குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=1ScZr50v_2E

மோகன் ஜி கைது:

இப்படி இவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அதோடு சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து இன்று காலை திருச்சி போலசார் மோகன் ஜியை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மோகன் ஜி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்த சர்ச்சை கருத்துக்கள் தான் அவரின் கைதுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில், திரைப்பட இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

மோகன் ஜி குறித்து சொன்னது:

யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில்,’’ புகழ்பெற்ற கோயில் ஒன்று தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் நான் இதை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தான் கூறியிருக்கிறார். இயக்குனர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full