தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெற்றிருந்தது. இது குறித்து பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு வெளியான காப்பான் படத்திற்கு பிறகு பாண்டிராஜ்- சூர்யா கூட்டணியில் எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Advertisement

எதற்கும் துணிந்தவன் படத்தின் கதை:

மேலும், இப்படத்தின் பாடல்களும், டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. பொள்ளாச்சி சம்பவத்தை மாஸ், மசாலா ஆக்‌ஷன் கதைக்களத்துடன் இயக்குநர் பாண்டிராஜ் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன்.

எதற்கும் துணிந்தவன் படம்:

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட விடமாட்டோம் என்று அரசியல் கட்சியினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் வந்த ஜெய் பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளதாக பாமக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

Advertisement

பாமக கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை:

அது மட்டுமில்லாமல் பல வன்னியர் சங்கத்தினர் ஜெய் பீம் படத்திற்கு எதிராக கோஷங்களை செய்திருந்தார்கள். மேலும், நடிகர் சூர்யாவிற்கு எதிராக பல வன்முறைகளும் நடத்தப்பட்டது. இதனால் படக்குழுவினர் அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சினையின் காரணமாக தங்களிடம் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டியதற்காக சூர்யா இதுவரை எந்தவித மன்னிப்பு கேட்கவில்லை.

Advertisement

எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடக்கூடாது:

இதனால் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என்று பாமக கட்சி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் திரை உலகினர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நடிகர் சூர்யா தரப்பில் இருந்தும், எதற்கும் துணிந்தவன் படக்குழு தரப்பில் இருந்தும் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதோடு இதற்கு சூர்யா ரசிகர்கள் என்ன ரியாக்ஷன் பண்ணுவார்கள் என்று தெரியவில்லை.

Advertisement