போடா போடா புண்ணாக்கு பாடலை பாடியது இந்த சூப்பர் சிங்கர் நடுவர் தானா? அட இவரா?

By subhashini · 14/12/2023

போடா போடா புண்ணாக்கு பாடிய பிரபலம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான பாடல்களில் ஒன்று போடா போடா புண்ணாக்கு. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் மீம்ஸ் மெட்டீரியலாகவே இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் தான் இந்த பாடல் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=TRSUnUeOfTI

அன்றிலிருந்து இன்று வரை இந்த பாடல் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பாடலை சிறுவன் ஒருவன் தான் பாடினான் என்று பலருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த பாடலை பாடியவர் ஒரு சிறுமி. அவரைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அவருடைய பெயர் கல்பனா ராகவேந்தர்.

கல்பனா திரைப்பயணம்:

தற்போது இவர் மிகப் பிரபலமான பாடகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தென்னிந்திய சினிமாவில் உள்ள பல மொழிகளில் பாடியிருக்கிறார். கல்பனாவின் தந்தை ராகவேந்தர். இவர் பிரபலமான நடிகராவார். இவர் ஸ்ரீ ராகவேந்திரா, சிந்து பைரவா, வைதேகி காத்திருந்தாள் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கல்பனா தன்னுடைய தந்தையின் மூலமாக தான் இவருக்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கல்பனா குறித்த தகவல்:

பின் புன்னகை மன்னன் படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு டப்பிங், பாடல், நடிப்பு என்று இவர் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். இவர் தமிழ் மொழியை விட அதிகம் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தான் பணியாற்றி இருக்கிறார். இந்த மொழிகளிலும் இவர் பாடிய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது.

கல்பனா பாடிய பாடல்கள்:

மேலும், தமிழில் இவர் மாயாவி படத்தில் வந்த கடவுள் தந்த அழகிய வீடு, பிரியமான தோழி படத்தில் பெண்ணே நீயும் பெண்ணா போன்ற பாடல்கள் எல்லாம் பாடி இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜோதிகா மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த 36 வயதினிலே படத்தில் சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் என்ற பாடலையும் கல்பனா பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இடையில் இவர் மலையாள சேனல் நடத்திய ஒரு இசை போட்டியில் கலந்து கொண்டிருந்தார்.

கல்பனா நிலைமை:

இவர் நீதிபதியாக இருக்கும் திறமை இருந்தும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். காரணம், இவருடைய குடும்ப சூழ்நிலை, பொருளாதார கஷ்டம். இந்த போட்டியில் வெற்றி பெற்று கல்பனா ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றிருந்தார். கிட்டத்தட்ட இவர் 1500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 3000 மேடை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full