ஏ.ஆர்.ரகுமான் அம்மா சொன்ன சர்ச்சை வார்த்தை - உண்மையை போட்டுடைத்த பிறைசூடன், வைரலாகும் வீடியோ

By subhashini · 20/1/2026

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்படுகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், பாலிவுட்டில் மதரீதியான பாகுபாடுகள் நிறைய இருக்கிறது. முஸ்லிம் என்பதால் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், பாலிவுட் சினிமா பற்றி தவறாகவும் பேசி இருந்தார். இதை அடுத்து பலருமே ஏ.ஆர் ரகுமானை விமர்சித்து இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் போட்ட பதிவில், ஏ ஆர் ரகுமான் ஒரு முஸ்லிம். இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது.

ஏ.ஆர்.ரகுமான் பேட்டி:

புகழ் பெற்றவர்களும் பணக்காரர்களும் எந்த சூழலிலும் பிரச்சனைகளை எதிர்கொள்வதே கிடையாது.
பிரச்சனை என்பது என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு தான் வருகிறது. நான் இந்த நாட்டினுடைய குடிமகன் கிடையாது. ஆனால், இந்தியாவில் பிறந்த பலரை விடவும் நான் இந்த நாட்டை ரொம்ப அதிகமாக நேசிக்கிறேன். எனக்கு ஓட்டு உரிமை இல்லை என்றாலும் என்னுடைய கொள்கைகளுக்காக போராடிக் கொண்டு இந்த மண்ணில் வாழ்கிறேன். ஏ ஆர் ரகுமான் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராக காட்டிக் கொள்வது அவருக்கு பொருத்தமானது கிடையாது என்றெல்லாம் கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=1A6LcCizG94

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏ.ஆர் ரகுமான், யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவதாக கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நான் யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தவில்லை என்றெல்லாம் கூறியிருந்தார். இந்த நிலையில் பாடல் ஆசிரியரான பிறைசூடன் ஏற்கனவே அளித்த பேட்டியில், ஒரு பொது நிகழ்ச்சியில் ஏ. ஆர் ரஹ்மானை சந்தித்தேன்.

பாடலாசியர் சொன்னது:

அவர் மறுநாள் ஒரு பாடலுக்காக என்னை அழைத்தார். அப்போது அவரின் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். அதில் உடன்பாடில்லை. யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை என்று சொன்னதாக கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full