இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் பொய்க்கால் குதிரை. இந்த படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி, ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அப்பா- மகள் சென்டிமென்ட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஒருநாள் விபத்தில் பிரபுதேவா தன்னுடைய காலை இழந்து விடுகிறார். காலை இழந்தும் பிரபுதேவா தன் மகளுடன் சந்தோஷமாக வசித்து வருகிறார். இவர் சாதாரண வேலை செய்தாலும் ஒவ்வொரு நாட்களையும் புன்னைகையுடன் தான் தன் மகளுடன் கழித்து வருகிறார். ஆனால், பிரபுதேவாவின் மகளுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரி செய்ய 70 லட்ச ரூபாய் பணம் தேவை.

Advertisement

இதனால் பணத்திற்காக பிரபுதேவா பலரிடம் உதவி கேட்கிறார். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. கடைசியில் சிறையில் இருக்கும் பிரபுதேவாவின் தந்தை உதவ வருகிறார். ஆனால், அவர் குழந்தை கடத்த வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். அதற்கு பிரபு தேவா ஒத்து கொள்கிறார். பின் குழந்தையை கடத்த திட்டத்தை போட்டுக் கொடுத்து இதை செய்தால் பிரபுதேவாவிற்கு பணம் தருவதாக கூறுகிறார்.

தன் குழந்தைக்காக பிரபுதேவா கடத்தல் தொழிலை செய்தாரா? அதனால் அவர் சந்தித்த பிரச்சனை என்ன?
இறுதியில் பிரபுதேவா தன் குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
வழக்கம்போல் பிரபுதேவா தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் குழந்தையும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

Advertisement

அதேபோல் படத்தில் பிற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் கஷ்டமான சூழ்நிலையில் சில மருத்துவர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள், மருத்துவ செலவுக்காக சில என்.ஜி. இன்ஜின்கள் பணத்தை வசூலித்து எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை இயக்குனர் அழகாக காண்பித்திருக்கிறார். இருந்தாலும், அந்த காட்சிகள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படவில்லை.

Advertisement

வரலட்சுமியின் குழந்தையை கடத்த பிரபுதேவா முயற்சி செய்கிறார். அப்போது பல ட்விஸ்ட்டில் திரைக்கதை கதை நகர்கிறது. ஆனால், அந்த ட்விஸ்ட் எல்லாம் பார்வையாளர்கள் யூகிக்கும் அளவிற்கு தான் இருக்கிறது. பெரிதாக எதிர்பார்ப்புடன் எந்த காட்சியும் இல்லை. இதனால் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியில் வில்லனும், ஹீரோவும் மாறி மாறி கதையை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

ஆனால், பின்னணி இசை பக்க பலமாக இருந்திருக்கிறது. படத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொண்டு வந்திருந்தால் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கலாம். ஆனால், பிரபுதேவாவின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களை விட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓகே என்று சொல்லலாம்.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக உள்ளது.

பிரபுதேவாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது.

குறைகள் :

கதையை கொண்டு சென்ற விதம் சொதப்பல்.

பல இடங்களில் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்ட வைத்திருக்கிறது.

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் பொய்க்கால் குதிரை – வேகம் குறைவு.

Advertisement