ஷூட்டிங்கிற்கு தாமதமானதால் பைக்கில் சென்றதால் அனுஷ்கா, அமிதாப் மீது போலீஸ் எடுத்த நடவடிக்கை - என்ன காரணம் தெரியுமா ?

By subhashini · 17/5/2023

ஹெல்மெட் அணியாமல் அமிதாபச்சன், அனுஷ்கா சர்மா இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திருப்பது குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம். இவர் 1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டு இருக்கிறார். இவருடைய நடிப்பு திறமைக்காக தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு வருகிறார். இதனிடையே இவர் நடிகை ஜெயபாதூரியை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஸ்வேதா மற்றும் அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

அமிதாபச்சன் குடும்பம்:

இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் அமிதாபச்சன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திருப்பது குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவின் வைரலாகி இருக்கிறது. அதாவது, நேற்று காலையில் அமிதாப்பச்சன் அவர்கள் அவசர அவசரமாக தன்னுடைய வேலைக்கு சென்று இருக்கிறார்.

பொது வெளியில் அமிதா பச்சன் செய்த செயல்:

ஆனால், அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கிறார். பின் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் அமிதாப்பச்சன் காரை விட்டு இறங்கி அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகன நபரிடம் உதவி கேட்டு இருக்கிறார். அதன் பின் அவருக்கு அமர்ந்து அமிதா பச்சன் பயணம் செய்திருக்கிறார். மேலும், அமிதாபச்சன் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டியும் ஹெல்மெட் அணியவில்லை. அவர் தொப்பி தான் அணிந்திருந்தார்.

அனுஷ்கா சர்மா செய்த காரியம்:

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த புகைப்படத்தை அமிதாபச்சன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, சரியான நேரத்தில் பணிக்கு செல்ல உதவிய மஞ்சள் டீ சர்ட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு நன்றி என்று கூறியிருந்தார். இதேபோல் நடிகை அனுஷ்கா சர்மாவும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் பின்னாடி அமர்ந்து பயணம் செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ, புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மாவை விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

பொதுவாகவே டிராபிக் விதிமுறையின் படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா இவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருக்கிறார்கள். இது குறித்து தான் தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதை பார்த்த மும்பை போலீஸ் நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விக்கு இது தொடர்பாக விளக்கம் கொடுக்கப்படும் என்று பதிவிட்டு இருக்கின்றார்கள்.

behindtalkies AMP · Quick view
View full