சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சினிமா பிரபலங்களின் புகைப்படங்களும், அவர்களுடைய பெயர்களை வைத்தும் பல்வேறு மோசடி வேலைகளை நடத்தி வருகிறார்கள் மர்ம நபர்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான நடிகர் விஜய் தேவர்கொண்டா பெயரில் போலியான முகநூல் பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் கணக்குகள் துவங்கி தொடங்கியுள்ளார்கள். அதன் மூலம் பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்த மர்ம நபர் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. விஜய் தேவர்கொண்டா சினிமா உலகிற்கு வந்த குறுகிய நாளிலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் இவர் லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடித்து உள்ளனர். சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisement

தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஃபைட்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டா பெயரில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் போலி கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார். அதன் மூலம் பல இளம் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். அதை உண்மை என்று நம்பி பல பெண்கள் அவரிடம் சாட் செய்து வந்து உள்ளனர். அந்த மர்ம ஆசாமி இதை பயன்படுத்தி பெண்களிடம் ஆபாச வார்த்தைகளையும், புகைப் படங்களையும் நிறைய அனுப்பியுள்ளார். இந்த தகவல் எப்படியோ நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தன்னுடைய நண்பர் மூலம் தெரியவந்து உள்ளது. இதனைக் கேட்டு விஜய்தேவரகொண்டா அதிர்ச்சியடைந்து உள்ளார்.

மேலும், இவர் தன்னுடைய மேலாளர் உதவியுடன் ஹேமா என்ற பெயரில் அந்த மர்ம ஆசாமி உடன் சாட் செய்து உலர். பின் இந்த ஷாட்டை ஆதாரமாகக் கொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். பின் சைபர் கிரைம் போலீசார் இதே போல் பெண் ஒருவரை ஏற்பாடு செய்து அந்த மர்ம சாமியுடன் முகநூல் சாட்டிங் செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் மூலமாகவே இந்த போலி ஆசாமியை ஹைதராபாத்துக்கும் வரவழைக்கப்பட்டார்கள். அப்போது போலீசார் அங்கு மறைந்து நின்று விஜய் தேவர்கொண்டா தரப்பு ஆட்கள் மட்டும் அந்த போலி நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசார் அந்த மர்ம ஆசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
Advertisement