திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரம் ரசிகர்கள் மீது சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் தடியடி - வைரலாகும் வீடியோ.

By Arun · 23/8/2022

தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். . நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். நடிகர் விக்ரம் அவர்கள் தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம்.

இரண்டு ஆண்டு முன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விக்ரமும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இனைந்து நடித்து வெளியான படம தான் மஹான். தந்தையும் மகனும் இந்த படத்தில் நடிப்பின் உட்சத்திற்கே சென்று விட்டனர் என்று சொல்லாம். அந்த அளவு மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த நவராத்திரி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து இருப்பார். அதே போல 2008 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து விதமான கெட்டப்பில் தோன்றி இருப்பார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து உள்ளார் என்று கூறபடுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பாஸ்டர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிஇருந்தது. அதில் விக்ரம் ஒரு கண்ணாடி முன்பு நின்று 7 கெட்டப்புகளுடன் தோன்றி மாஸ் காட்டி இருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளி வந்தது.பல வித போரட்டங்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் வரும 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விக்ரமின் ரசிகர்கள் மேல் தடியடி :-

இந்நிலையில் கோபுரா படத்தின் புரோமோஷன்காக மதுரை திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை சந்திக்கும் நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த கோபுரா படத்தின் குழுவினர். சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்து சேர்ந்தனர். அப்பொழுது விக்ரம் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வரப் போகிறார் என்ற செய்தியை தெரிந்து கொண்ட விக்ரமின் ரசிகர்கள் அவரை காண்பதற்காக விமான நிலைய முன்பு குவிந்தனர் மற்றும் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இடையூறாக குவிந்த நூற்றுக்கணக்கான விக்ரமின் ரசிகர்களை விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தடியை வைத்து விரட்டி அடித்த அனுப்பினர். விக்ரம் தன் ரசிகர்களுக்கு கையை அசைத்து, முத்தம் கொடுத்துவிட்டு காரில் ஏறி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full