அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித்தையும், படகுழுவையும் காவல் ஆணையர் பாராட்டி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, A leader is someone who demonstrates what’s possible.

Advertisement

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

Advertisement

? படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

Advertisement

? கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

? பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
தலைமையிடம்
சென்னை மாநகரம்

Advertisement