தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழும் நயன்தாரா கடந்த ஆண்டு மற்றும் விக்னேஷ் சிவன் பல ஆண்டு காலமாக காதலித்து யாருக்குமே தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி சென்னை Ecrல் உள்ள தனியார் சொகுசு விடுதியில் படு கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அது தமிழ் நாடு மருத்துவ துறை அமைச்சர் வரையில் சென்று தணிவடைந்தது பின்னர் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் படம் பிரச்னை, திருப்பதியில் காலனி தொட்டு சென்றது என இப்படி தொடரும் பிரச்சைகளுக்கு நடுவே குழந்தைளை பார்த்துக்கொள்வதில் அதிக நேரத்தை செலவிடுவதினால் படங்களில் நடக்க நேரம் கிடைக்காததினால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அப்பார்ட்மெண்ட் பிசினஸில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisement

போலீஸ் புகார் :

இந்நிலையில் நயன்தாராவின் மாமனாரும், விக்னேஷ் சிவத்தின் தந்தையுமான சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் உறவினர்கள் போலீஸில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்துடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அவரது மனைவியுடன் லால்குடியிலும், அவரது சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி சரோஜாவுடன் கோவையிலும் வசித்து வருகின்றனர்.

காரணம் :

இதனிடையே தான் குஞ்சிதபாதம் நேற்று லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் தன்னுடைய அண்ணன் மாணிக்கத்துடன் வந்து சிவக்கொழுந்து தங்களுக்கு சொந்தமான சொத்தை தங்களுக்கே தெரியாமல் விற்று ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்னனர். எனவே மோசடியாக பொது சொத்தை விற்றது தொடர்பாக சிவக்கொழுந்து மற்றும் அவரது வாரிசுகளான அவரது மனைவி, மகன் விக்னேஷ் சிவன், மருமகள் நயன்தாரா மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Advertisement

மேலும் தங்களுடைய சொத்தை முறை படி வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒரு சொத்தில் ஒரு பங்கு சிவக்கொழுந்துக்கும் மீது 8 பேருக்கும் என்று சொல்லப்பட்டது என்று மாணிக்கம் தெரிவித்துள்ளார். மேலும் குஞ்சிதபாதம் கூறுகையில் “தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது.

Advertisement

ஆனால் தாங்கள் ஏழ்மையில் இருப்பதினால், தங்களுக்கு குழந்தைகள் இல்லததினாலும், தங்களுடைய சொத்தை மீட்டு தருமாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறன்ற நிலையில் விரைவில் எது உண்மை என்பது தெரிவியவரும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்திருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் மீது மீண்டும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement