இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார், காரணம் இதுதான்

By Rajkumar · 18/8/2024

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரின் இசைக்கும், குரலுக்கும் என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் வசித்திருக்கிறார். அந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூபாய் 20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருக்கிறார். அவரிடம் வாடகை கேட்கும் போதெல்லாம் அவர் வாடகை தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா மீது புகார்:

மேலும், வாடகை பணம் கேட்க போன் செய்த போதும் அவர் செல்போனை எடுக்கவில்லையாம். அதனைத் தொடர்ந்து யுவன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சமீபத்தில் வெளியே எடுத்துச் சென்றுள்ளார். யுவன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அங்கு வசித்த நிலையில் மூன்று ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், இந்த சம்பவத்தை தீர விசாரித்து யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என வீட்டின் உரிமையாளர் ஹஜ்மத் பேகம் புகார் அளித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா விளக்கம்:

மேலும், இந்த புகாரை பெற்றுக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் எதுவும் கொடுக்கவில்லையாம். இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தற்போது யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் நடித்து இருக்கும் 'கோட்' படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கோட் படம்:

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. கோட் படத்தில் வெளியான முதல் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், கடைசியாக வெளியான மூன்றாவது பாடல் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. கோட் படத்தின் மூன்றாவது பாடலுக்கு 'ஸ்பார்க்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கோட் பட பாடல்களுக்கு கிடைத்த விமர்சனம்:

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள். மேலும், இந்த பாடலுக்கு கங்கை அமரன் வரிகள் எழுதி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான 'ஸ்பார்க் பாடல்', மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. யுவன் சங்கர் ராஜா விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுப்பதில் மட்டும் ஏமாற்றுவதில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது இந்த போலீஸ் புகாரியில் மாட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full