நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மோசடி புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சிறு நடித்து வேடங்களில் தான் நடித்து வந்தார். பிறகு தன்னுடைய கடும் உழைப்பினால் கதாநாயகன் ஆனார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார்.

மேலும், இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம், ரங்கா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

விலங்கு படம் பற்றிய தகவல்:

அதுவும் கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விலங்கு. இது ஒரு வெப் சீரிஸ் ஆகும். இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் சீரிஸ் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த தொடரில் விமல் காவல்துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார்.

விலங்கு படத்தின் கதை:

ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலையை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக விமல் வருகிறார். இந்த படத்தில் கடைசி வரை கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். இது ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இது தவிர தற்போது விமல் அவர்கள் ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

விமல் மீது புகார் அளித்த தயாரிப்பாளர்;

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர் தான் விமல் மீது புகார் மனு கொடுத்துள்ளார். மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது, களவாணி, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் விமல் மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கடன் வாங்கினார். மேலும், அந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் என்னிடம் வாங்கிய கடன் தொகை 5 கோடியை இதுவரை திருப்பி தரவில்லை.

Advertisement

மனுவில் சினிமா தயாரிப்பாளர் கூறியது:

அவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால், எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். நடிகர் விமல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை வசூலித்து தருமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படி விமல் மீது புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு விமல் தரப்பிலிருந்து என்ன பதில்? வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement