திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தை தடை செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ருத்ர தாண்டவம்’இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன், ராதாரவி மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. மேலும், அந்த ட்ரைலரில் கிறிஸ்துவ மதம் மாற்றம் பற்றியும் இடம்பெற்று உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மோகனை கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்த சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் புகார்  மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதையும் பாருங்க : 13 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள இது தான் காரணம். நடிகை ஜெனிபர் சொன்ன ரகசியம்.

Advertisement

அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குநர் மோகன்ஜி பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்வதோடு இயக்குநர் மோகன்ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த தகவலை ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்து இருந்தார். மேலும், அந்த கடைசியா PRO அப்பாய்ண்ட் பண்ணிட்டீங்க போலவே என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு மோகன், செம கிண்டல் னா உங்களுக்கு என்று பதில் அளித்துள்ளார். ஏற்கனவே மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படதிற்கும் இதே போல பல எதிர்ப்புகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Advertisement