சிங்கம் சூர்யாவைப் போல் மீசை வைத்ததால் கான்ஸ்டபிளுக்கு வந்த சோதனை. சோஷியல் மீடியாவில் வைரலாகும் கான்ஸ்டபிளின் நிலை. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் சிங்கம்.

இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா செட்டி, விவேக், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். மேலும், இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்தப் படத்தின் கதை எந்த அளவிற்குப் பிரபலமோ அதே போல் சூர்யாவின் மீசையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டது.

Advertisement

சிங்கம் சூர்யாவை போல் மீசை வைத்த கான்ஸ்டபிள்:

சிங்கம் படம் வந்தபோது பல பேர் சூர்யாவைப் போலவே மீசை வைத்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி இருந்தார்கள். அதிலும் போலீஸ் அதிகாரிகள் பலரும் சிங்கம் சூர்யாவைப் போலவே மீசை வளர்த்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சிங்கம் சூர்யாவைப் போல் மீசை வைத்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு நடந்த பரிதாபம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி என்னத்தான் நடந்தது என்றால்,

மீசையை வெட்ட சொன்ன உயர் அதிகாரிகள்:

மத்தியபிரதேச காவல்துறையின் சிறப்பு பொது இயக்குனருக்கு வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா வைத்திருந்த பெரிய மீசை போலவே வைத்தார். இதனால் ராகேஷ் வைத்திருந்த மீசையை வெட்ட வேண்டும் என உயர் அதிகாரிகள் அவரிடம் கூறி இருக்கிறார்கள். ஆனால், அவர் தனது மீசையை வெட்டாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கான்ஸ்டபிள் ராகேஷ்ஷை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தார்கள்.

Advertisement

மீசையை வெட்ட மறுத்த கான்ஸ்டபிள்:

மேலும், இதுகுறித்து ஐ.ஜி. பிரசாந்த் கூறியது, ராகேஷின் மீசையை வெட்டு என்று அறிவுறுத்தி இருந்தோம். ஆனால், ராகேஷ் மீசையை வெட்டவில்லை. உயர் அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றவில்லை. பெரிய மீசையை வைப்பதில் பிடிவாதத்துடன் இருந்ததால் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்று கூறி இருந்தார்கள். இதனை அடுத்து இதுகுறித்து ராகேஷ் ராணா கூறியிருப்பது, என் மீசையை வெட்ட மாட்டேன். என் மீசை தான் என்னுடைய பெருமை என்று டுவிட் ஒன்று போட்டிருக்கிறார்.

Advertisement

எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

தற்போது ராகேஷின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ராகேஷ்ஷிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மீசைக்கும், வேலைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இவரை மீசை எடுக்க சொல்கிறீர்கள்? இதுயெல்லாம் தவறு என்று உயர் அதிகாரிகளின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement