சினிமா பாணியில் குற்றவாளிகளின் கதையை முடித்த போலீஸ். பிரியங்கா ரெட்டி இழப்பிற்கு கிடைத்த நியாயம்.

By Rajkumar · 6/12/2019

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைட்ரபாத்தில் 27 வயதே ஆன பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா என்பவர் 4 பேரால் திட்டம்போட்டு கடத்தி, கற்பழித்து உயிரோட எரிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் நடு ரோட்டில் வைத்து தண்டிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கைகளும் கண்டனங்களும் வலுத்து வந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 4 பேரும் போலீஸ் நிலையத்தில் இருக்கும் வீடியோ ஒன்றும் வைரலாக பரவியது.

அந்த விடியோவை கண்ட பலரும் கொதிப்படைந்து அந்த 4 பேரையும் நாயை அடித்து கொள்வது போல கொள்ள வேண்டும் என்று தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி அந்த 4 பேரும் தற்போது போலீசாரால் சினிமா பணியில் என்கௌண்டர் செய்து கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீஸ் வட்டாரங்களின்படி, குற்றம் நடந்த இடத்தை புனரமைக்க, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்தான்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டபோது தப்பி ஓட முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களை பறித்து, சத்தான்பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.இருப்பினும், என்கவுன்டர் எவ்வாறு நடந்தது என்பது குறித்து சைபராபாத் போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

விரைவில் போலீஸ் அதிகாரிகள் விவரங்களை அறிவிப்பதாக தெரிவித்தனர். எனவே, இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர், இதுபோன்று பெண்களை கற்பழித்து கொள்ளும் நபர்களுக்கு இதுபோன்ற தண்டனை தான் சரியான வழி என்பது தான் அனைவரின் விருப்பமும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full