சிங்களம் தெரியாது போடா, தமிழ்ல கதைடா டேய் - ஹரிஹரன் விழாவில் போலீசாரை அசிங்கப்படுத்திய பார்வையாளர்கள்.

By Siva · 11/2/2024

பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’  என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர் போன்றவர்களும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

https://twitter.com/LdanielIss63989/status/1756164337868341541

இந்த விழாவில் விஐபிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்ட்ரி இலவசம் என்பதால் இந்த விழாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அப்போது விஐபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்று இருக்கிறார்கள்.இதனால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் ரசிகர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தள்ளுமுள்ளில் சிலருக்கு மூச்சு திணறல் கூட ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்த பிரபலங்களும் நிகழ்ச்சியையும் நடத்த முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.

https://twitter.com/chettyrajubhai/status/1756674332145918046

ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் மீடியாக்களில் இந்த நிகழ்ச்சி குறித்த விவாதங்கள் வைரலாகி வருகிறது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் அங்கே நடந்த விஷயங்களை வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த விழாவில் போலீசார் ஒருவர் மேடையில் சிங்களத்தில் பேசிய போது பார்வையாளர்கள் சிலர் தமிழில் பேசுடா என்று கூச்சலிட்டுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 'நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தோம். ஆனால் அந்த 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள்.

கூட்டம் உள்ளே நுழைந்த பிறகு தான் பிரச்சனை ஏற்பட்டது இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைபட்டது அதன் பின்னர் நிகழ்ச்சி நன்றாக தான் சென்றது. நிகழ்ச்சி பாதியில் நின்றது என்பது தவறான தகவல் என்று கூறியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஹரிஹரனின் இந்த பதிவும் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை சுதப்பியதற்கு கலா மாஸ்டரை கடுமையாக சாடி வருகின்றனர் யாழ்பான ரசிகர்கள்.

behindtalkies AMP · Quick view
View full