இறுதி ஊர்வலத்தில் உடைந்து போன பாக்கியராஜ் குடும்பம், காவல்துறை அணிவகுப்பு மரியாதை

இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை

By subhashini · 28/6/2026

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். தற்போது இவருடைய மறைவு செய்திதான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரையும் பாக்கியராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.

முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார். இவர் இயக்கிய பல வெற்றி படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி படங்களையும் இயக்கியும் நடித்திருக்கிறார்.

பாக்கியராஜ் குறித்த தகவல்:

சமீபத்தில் தான் இவருடைய 50 ஆண்டுகால திரைப்பயணம் நிறைவடைந்தது அடுத்து விழாவும் நடத்திருந்தார்கள். நேற்று காலை பாக்கியராஜ் காலமாகி இருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருந்தார். இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். சில வாரங்களுக்கு முன்பு தான் இவருடைய குருவான பாரதிராஜா காலமாகி இருந்தார். 17 நாட்களிலேயே குருவை தொடர்ந்து சிஷ்யன் பாக்கியராஜ் இறந்திருப்பது தமிழ் திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பிரபலங்கள் அஞ்சலி:

மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலி நிறைவு அடைந்ததை அடுத்து பாக்யராஜின் உடலுக்கு இறுதி சடங்குகள் எல்லாம் நடைபெற்றது. பின் அவருடைய உடலுக்கு காவல்துறையினர் அணிவகுத்து மணியாதையும் செலுத்தினார்கள்.

இறுதி ஊர்வலம்:

பாக்யராஜினுடைய இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினரும் பங்கு கொண்டார்கள். அது மட்டும் இல்லாமல் இறுதி ஊர்வல வாகனத்தில் பாக்யராஜினுடைய மனைவி பூர்ணிமா, மகன், மகள் எல்லோருமே இருந்தார்கள். நுங்கம்பாக்கத்தில் நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு பாக்யராஜ் உடைய எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு பாக்யராஜ் உடலுக்கு தகனம் செய்யப்படுகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full