8 ஆம் வகுப்பு சிறுமையை கற்பமாக்குவேன் என்று மேடையில் பாடிய புல்லிங்கோ பாடகரை போலீஸ் தேடுகிறது. மோகன் போட்ட ட்வீட்.

By Rajkumar · 23/12/2021

எட்டாம் வகுப்பு மாணவியை கரபமாக்குவேன் என்று மேடையில் கானா பாடகரின் வீடியோவை பகிர்ந்து அவர் மீது போஸ்க்கோ சட்டம் பாய வேண்டும் என்று இயக்குனர் மோகன் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கானா பாடகரை போலீசார் தேடி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.

திரௌபதி இயக்குனர் மோகன் :

https://twitter.com/RathinamVimal/status/1473305134717300741

திரௌபதி கிளப்பிய சர்ச்சை :

இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் நாடக காதல் குறித்து எடுத்துக்கூறியிருந்தார் மோகன். ஆனால், இந்த படத்தில் நாடக காதலை செய்வது குறிப்பிட்ட இனத்தவர் தான் என்று மோகன் குறிப்பிட்டு இருப்பதாக சர்ச்சைகள் வெடித்து.

மோகன் பகிர்ந்த வீடியோ :

இந்த படத்தை தொடர்ந்து மோகன் ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு பின்னால் நடக்கும் அரசியல் குறித்து எடுத்து இருந்தார் மோகன். இப்படி தான் இயக்கிய கடைசி இரண்டு படங்களில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்ன மோகன் நிஜத்திலும் பல சமூக கருத்துக்களை கூறி வருகிறார்.

https://twitter.com/mohandreamer/status/1473325196983488514

சர்ச்சையில் சிக்கிய கானா பாடகர் :

அதே போல அன்றாட வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய செய்திகளை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் கானா பாடகர் ஒருவர் மேடையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை பற்றி தவறாக பாடும் பாடல் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை ட்விட்டர் வாசி ஒருவர் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/mohandreamer/status/1473687853192433670

மோகன் காட்டம் :

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது '8 வது படிக்கும் சிறுவயது சிறுமியை கர்பமாக்குவோம், ஏன்னா அப்போ தான் எங்கள விட்டு போவாது,பெண்கள் இந்த நாடக காதல் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்த மோகன் ' போக்ஸோ சட்டம் பாய வேண்டும்' என்று பதிவிட்டு இருந்தார்.

https://twitter.com/Arasu12274092/status/1473588260731777024

கானா பாடகரை தேடும் போலிஸ் :

இந்த வீடியோவில் அப்படி பாடியவரின் பெயர் சரவெடி சரண் என்பது தெரியவந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இந்த வீடியோ,  திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக வருண் குமார் தெரிவித்துள்ளவர், போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் '' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full