விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போலீஸ் அனுப்பிய அதிரடி நோட்டீஸ் - பின்னணி இது தான்

By subhashini · 2/9/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக போலீஸ் அனுப்பி இருக்கும் நோட்டீஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு உலகில் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றியிருந்தார்.

மாநாடு குறித்த தகவல்:

விஜய் கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இருபக்கம் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் ஆனந்த் தொடங்கி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடைபெற இருக்கிறது.

போலீஸ் விசாரணை:

இதனால் இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் அனுமதி கேட்டு மனு கொடுத்து இருந்தார். அதில் முதல் மாநாடு செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இதை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு திருமால், மற்ற போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் விஜய் மாநாடு நடத்தும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Thanthi TV (@thanthitv)

மாநாடு குறித்த தகவல்:

அதில், மாநாட்டுக்கு வருபவர்கள் உடைய வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடவசதி இருக்கிறதா? மாநாடு நடந்தால் போக்குவரத்து பாதிக்கப்படுமா? பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுமா? என்றெல்லாம் பற்றி ஆலோசித்து விசாரித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் விஜய் கட்சி சார்பில் கொடுத்த அனுமதி கடிதத்திலும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதைவிட அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் எண்ணுகிறார்கள்.

போலீஸ் அனுப்பிய நோட்டீஸ்:

இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கு போலீஸ் நோட்டீஸ் ஒன்று அனுப்பி இருக்கிறது. அதில், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு என்ன? த.வெ.க மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது? மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன? மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது? என்று கேட்டு இருக்கிறார்கள். இதற்கு விஜய் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full