'கடவுளே அஜித்தே' சர்ச்சை : அஜித் அறிக்கை வெளியிட இந்த அரசியல் பிரபலம் தான் காரணமா காரணமா? முழு விவரம் இதோ

By subhashini · 13/12/2024

அஜித் அறிக்கை வெளியிட்டதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.

இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் வைரலாகி வருகிறது.

அஜித் பெயர் கோஷம்:

இந்த கோஷத்தால் வருத்தமடைந்து நடிகர் அஜித் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இதை நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளிகளில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‛க….. அஜித்தே” என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.

அஜித் அறிக்கை:

எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த நான் கோரிக்கைக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்! வாழு & வாழ விடு! என்று கூறி இருந்தார்.

அரசு பள்ளி விழா:

இந்த நிலையில் அஜித் அறிக்கை வெளியிட்டதற்கு காரணம் டிடிவி தினகரன் என்று கூறப்படுகிறது. அதாவது, கடந்த மாதம் கோவையில் நடந்த அரசு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்று இருந்தார். இந்த விழாவை ஒட்டி பெண்ணியத்திற்காக ஓடு என்ற தலைப்பில் மரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசு கொடுத்து இருந்தார். அப்போது மாணவர்கள் சிலர், 'கடவுளே அஜித்தே' என்று கோஷம் போட்டு கத்தி இருந்தார்கள். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தி இருந்தார்.

அறிக்கைக்கு காரணம்:

அதன் பின் நிர்வாகிகள் இடம் இதைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று கோஷத்தை எழுப்பும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. இதை கண்டித்து தான் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே தன்னை தல என்று அடைமொழி வைத்து கூப்பிட வேண்டாம். அஜித்குமார் அல்லது ஏகே என்று அழைத்தால் மட்டுமே போதும் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full