இவர் தான் இந்த வார எலிமினேஷன்.! அடித்துக் கூறிய பொன்னம்பலம்.!

By Rajkumar · 4/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி 9 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை சென்ற எபிசோடுகள் மூலம் யார் யார் என்ன கேரக்டர் என்பதை பார்வையாளர்கள் ஓரளவிற்கு உறுதி செய்து விட்டனர்.இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்று பொன்னம்பலம் கூறியுள்ளார்.

பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.

சினிமாவில் பல புதிய வில்லன் நடிகர்களின் வருகையால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. அதனால் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் பொன்னம்பலம் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பொன்னம்பலத்திடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கபட்டது. அப்போது இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் வெளியேற போகிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கடைசியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தான் வெளியேறுவார் என்று கூறியுள்ளார். இவர் சொன்னதை வைத்து பார்க்கும் போது பிக் பாஸ் வீட்டில் கடைசியாக சென்ற மீரா மிதுன் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கடைசியாக சென்றவர். எனவே, மீரா மிதுனை தான் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full