தன்னை காண இலங்கையில் இருந்து வந்த ரசிகர், கண்ணியம் தவறிய காவலர் - பொன்னம்பலம் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

By subhashini · 16/11/2024

நடிகர் பொன்னம்பலம் ரசிகரிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் பணம் மோசடி செய்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவர் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் இவரின் ரசிகர் அன்சாம் என்பவர் அவரை நேரில் சந்திக்க வந்திருந்தார். அன்சாம் இலங்கையை சேர்ந்த தமிழர்.

https://www.youtube.com/watch?v=bDCdZhgxIwg

இவர் பொன்னம்பலத்தின் ரசிகர் மட்டும் இல்லாமல் நண்பரும் ஆவார். மேலும், இவர் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். அந்த ஹோட்டலுக்கு இரவில் சீருடையுடன் வந்த காவல் அதிகாரி ஒருவர் அங்கு இருந்த பெண்ணுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். பின் அவர் அன்சாமை பார்த்தவுடன் விசாரித்து அவரிடமிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்து இருந்தார். அதோடு அந்த காவல் அதிகாரி மது போதையில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

அன்சாம் வீடியோ:

மேலும், இதை ஆடியோவாக அன்சாம் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு போலீஸ் டூவீலரில் வந்து ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் வெளியே வந்தவுடன் என்னிடம் இருந்த பேக்கை பறித்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டார். நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. அவர் வேலையை விட்டு தூக்குங்கள். என்னுடைய பணத்தை திருப்பி கொடுங்கள். இந்த ஒரு போலீசால் தமிழ்நாட்டு போலீஸ்கே கெட்ட பெயர்.

காவல் அதிகாரி செய்த வேலை:

இன்னொரு நாட்டில் இருந்து வந்தவருக்கு மரியாதை கொடுக்கணும். இப்படி எல்லாம் நடந்து கொள்வதா? என்று பேசி இருக்கிறார். இதை அடுத்து அந்த காவல்துறை அதிகாரியை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் பொன்னம்பலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அவர், தமிழ்நாடு காவல்துறை கமிஷனர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொன்னம்பலம் வீடியோ:

என் பெயரில் அவதூறாக சொன்ன போலீஸ் மதுபோதையில் இருந்த காரணத்தினாலும், அவரை சஸ்பெண்ட் செய்ததற்கும் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் நண்பர் இலங்கையிலிருந்து வந்த அன்சாம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரியிடம் வாங்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற சில காவல்துறைகள் அதிகாரிகள் செய்யும் சில காரியத்தால் மற்றவர்களுக்கும் அவமரியாதை ஏற்படுகிறது.

நன்றி சொல்ல காரணம்:

சீக்கிரமாகவே இந்த செயலை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் உயர் அதிகாரிகளுக்கும் ,
கமிஷனர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full