சீரியலில் தான் குடும்ப குத்து விளக்கு ஆனால் நிஜத்தில் - பொன்னி சீரியல் நடிகையின் இன்ஸ்டா கிளிக்ஸ்.

By subhashini · 17/3/2024

பொன்னி சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தர்ஷிகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2023
ஆம் ஆண்டு முடிந்தது.

இந்த சீரியலில் நாயகனாக ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நடிகர் வினோத், நாயகியாக பவித்ராவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ராதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை தர்ஷிகா. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் சபரி நாதன், வைஷு சுந்தர் மற்றும் சிந்துஜா விஜி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

தர்ஷிகா குறித்த தகவல்:

பொன்னி- சக்தி ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் கதை தான் பொன்னி சீரியல். இந்த தொடரில் பிரீத்தி
ரோலில் தர்ஷிகா நடித்து வருகிறார். விஜய் டிவி மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த பாண்டவர் இல்லம் சீரியலிலும் தர்ஷிகா நடித்திருக்கிறார். மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் செய்திருந்தார். மாடலிங் மூலம்தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம்.

தர்ஷிகா ட்ரஸ் ஷாப்:

அதுமட்டுமில்லாமல் இவர் யாக்கை என்ற டிரஸ் ஷாப் ஒன்றையும் வைத்திருக்கிறார். பின் இவர் மலபார் கோல்ட் விளம்பரத்தில் கூட நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தில் இவர் நடிகர் கார்த்தி உடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ட்ரஸ் ஷாப் ப்ரோமோஷன்காக இவரே மாடலாகவும் இருந்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மும்பையில் ஒரு நல்ல கம்பெனி நல்ல நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

View this post on Instagram

A post shared by tharshika (@tharsika_tharshi)

தர்ஷிகா லேட்டஸ்ட் புகைப்படம்:

அந்த நிறுவனம் இவரை வேலையை விட்டு தூக்கியது. இதனால் மணமுடைந்த தர்ஷிகா மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது தான் மாடலிங் செய்யலாம் என்று நினைத்தார். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு மீடியா வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தர்ஷிகா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full