பொன்னியின் செல்வன் மொத்த பட்ஜெட், நடிகர்களின் சம்பளம் - அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா ?

By Rajkumar · 26/9/2022

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்- நடிகைகள் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள்.

அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

படத்தின் பட்ஜெட்:

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. அதோடு இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள்-நடிகைகள் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து இருக்கிறது.

நடிகர்கள் வாங்கிய சம்பளம்:

அதாவது, இந்த படத்தில் அதிக சம்பளம் விக்ரமுக்கு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு 12 கோடி ரூபாய் தரப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது.

குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிஷாவுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம்.

ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடி ரூபாய் சம்பளம்.

வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கார்த்திக்கு 5 கோடி ரூபாய் சம்பளம்.

சுந்தரச் சோழன் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்.

பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு 1.5 கோடி சம்பளம்.

மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் ஆகியோர்களுக்கும் கோடிக்கணக்கில் தான் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full