பொன்னியின் செல்வன் : ஐஸ்வர்யா ராய், திரிஷா பயன்படுத்திய அந்த பொருட்கள் ஏலம் - போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள். அப்படி என்ன ஸ்பெஷல் ?

By Siva · 24/9/2022

இன்று ட்ரெண்டாகி வரும் சோழர் காலத்து தங்க நகைகளுக்கு பொதுமக்கள் இடையே புது வரவேற்பு பெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படம் வெளியாக இருக்கிறது. டைரக்டர் மணிரத்தினம் அவர்களுக்கு எடுக்கும் திரைப்படத்திற்கு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று முழு மனதுடன் செயல்பட கூடியவர். அதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் அனைத்து கதாபாத்திரங்கள் உண்மையான தங்க வைர ஆபரணங்களை செய்துள்ளார்.

இதில் நடித்த குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் இருவரும் அணிந்த தங்க ஆபரணங்கள் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் குறித்து கல்வெட்டுகளில் ஆராய்ந்து ஆய்வு செய்து 18 நபர்கள் கொண்ட குழுவின் நகை கலைஞர்களால் கையால் வடிவமைக்கப்பட்டு செய்யப்பட்ட நகைகள் இந்த திரைப்படத்தில் சிறப்பாக அனைத்து மக்கள் வரவேற்கப்படுகிறது.

சோழரின் புகழ்

பொன்னியின் பொன்னியின் செல்வன் படத்தில் மூலம் உலகம் முழுவதும் சோழ சிறப்பு பறைசாற்றும் போவதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் குந்தவை அணிந்து வரும் நகைகள் போன்ற டிசைன்களில் முன்னணி நகை கடை நிறுவனங்களில் தி சோழ கிங் என்ற பெயரை நகைகளை டிசைன் செய்து விற்பனைக்கு வெளிய விட்டு வருகின்றனர்.

சோழர் நகைகள் ஏலம் :

இதை மக்கள் வாங்குவதில் போட்டி ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சேலை பெண்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது நகைகள் விற்பனைக்கு வந்துவிட்டன.சோழர் காலத்தில் இருந்த தங்க நகைகள் போலவே தயாரிக்கப்பட்டு பொன்னியின் செல்வன் பாகம் 1இல் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல் தங்க நகைகள் ஐம்பொன் நகைகள் கவரிங் நகைகள் ஆகியவற்றை ஏலம் விடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நகை கடைகள் நிறுவனங்கள் போட்டி

அதனை வாங்குவதற்கு தங்க நகை கடைகள் நிறுவனங்கள் போட்டி போடுகிறது அதே சமயத்தில் அந்த நகைகளை ஏலத்தில் எடுக்கவும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளன.இவ்வாறு பொன்னியின் செல்வத்தின் பயன்படுத்தப்பட்ட நகைகள் சேலைகளுக்கு எவ்வளவு மக்களிடம் ஆதரவு இருக்கிறதோ பொன்னியின் செல்வன் படத்திற்கும் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பும் ஆதரவும் உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full