வித்தியாசமான முறையில் பொன்னியின் செல்வன் படத்தை ப்ரோமோட் செய்த விக்ரம், திரிஷா - என்னன்னு நீங்களே பாருங்க!

By subhashini · 14/9/2022

வித்தியாசமான முறையில் பொன்னியின் செல்வன் படத்தை திரிஷா - விக்ரம் புரமோட் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

படத்தின் டீசர் :

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீடு:

அதேபோல் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள். இவர்களுடன் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இன்னும் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களே இருக்கிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.

திரிஷா-விக்ரம் செய்த செயல்:

அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் தஞ்சை பெரிய கோவிலில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திரிஷாவும்- விக்ரமும் இந்த படத்தை வித்தியாசமாக ப்ரொமோட் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. திரிஷாவும், விக்ரமும் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் தங்களுடைய பெயர்களை மாற்றி இருக்கிறார்கள். அதாவது, விக்ரம் ஆதித்ய கரிகாலன் என்றும், திரிஷா குந்தவை என்றும் தங்களுடைய பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரங்களின் பெயராக மாற்றி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full