நான் அப்போது வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்பினேன் - நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்தது

By krithika · 31/1/2025

பிரபல நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படம் ஜீவா மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தெலுங்கு திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் மெகா ஹிட்டானது. அதற்குப் பிறகு இவர் தமிழில் விஜய்யின் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பூஜா ஹெக்டே திரைப்பயணம்:

'பீஸ்ட்' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் பாடல், டான்ஸ் மூலமாகவே பூஜா பயங்கர பாப்புலர் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். அதற்குப்பின் இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் என தென்னிந்தியா சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து 'ரெட்ரோ' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஜன நாயகன்:

மேலும், தளபதி விஜய் அவர்களின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் தளபதி விஜய் அவர்களின் கடைசி படம் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது பூஜா நடிப்பில் ஹிந்தியில் ' தேவா' என்கிற ஹிந்தி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நடித்திருக்கிறார். தற்போது படக்குழு இந்த படத்தின் பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார்கள்.

தேவா திரைப்படம்:

அந்த வகையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே, 'தேவா' திரைப்படத்தில் நான் புலனாய்வு பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டபோது, நானும் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்பிய மனநிலையில் இருந்தேன். அது ஒரு நடிகையாக நான் வரையறுக்கப்படும் விதத்தை மாற்றும். மேலும், தென்னிந்திய சினிமாவில் நான் என்னை நிலை நிறுத்திக் கொண்டாலும், ஹிந்தி பார்வையாளர்கள் என்னைப் போன்ற கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டார்கள்.

பூஜா ஹெக்டே பகிர்ந்தது:

மேலும், இந்த தேவா திரைப்படத்தில் என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனதில் பட்டதைச் சொல்ல பயப்படாத கதாபாத்திரமாக இருந்தது. குறிப்பாக எனது சொந்த ஊரான மும்பையில் நான் ஷூட்டிங்கில் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. மும்பை நகரின் மையப் பகுதியில் ஷூட்டிங் நடந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய ஷாஹித், ஒரு நடிகராக தேவா மிகவும் சவாலான படம். இது ஒரு வணிக உலகிற்குள் தள்ளப்படும் ஒரு சிக்கலான கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறது. மேலும், இந்தப் படம் ஒரு அதிரடி த்ரில்லர் படம் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full