சமந்தாவை கேலி செய்தாலும், சமந்தாவை முந்திய பூஜா ஹேக்டே.

By Rajkumar · 18/7/2020

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முகமூடி'. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். 'சூப்பர் ஹீரோ' படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

https://www.instagram.com/p/CCq2MGIns61/

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு 'ஒக்க லைலா கோஷம்' என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த 'அல வைகுந்தபுரமுலோ' என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் ' எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை' என்று பதிவிட்டிருந்தார்.நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு சமந்தா ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது.

அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். இருப்பினும் சமந்தா மற்றும் பூஜா ஹெட்ஜ்ஜேவின் ரசிகர்கள் மத்தியில் பணிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பூஜா ஹெட்ஜ் சமந்தாவை விட இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களைபெற்றுள்ளார். பூஜை ஹெட்ஜெய் இதுவரை 11 மில்லியன் பேர் பின் தொடர்ந்துள்ளனர். ஆனால், சமந்தாவை 10.8 மில்லியன் பேர் பாலோ செய்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full